Apple நிறுவனம் வெளியிட்டிருக்கும் F.M வானொலியுடன் கூடிய புதிய iPod
விலை உயர்ந்த டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் Apple நிறுவனம் முதல் முறையாக 'F.M Radio' உடன் கூடிய புதிய iPod சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.கையடக்க எம்.பி 3 பிளேயர் என்றாலே விற்பனையில் முதலிடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iPod சாதனம் தான். காரணம் இரைச்சல் இல்லாத துல்லியமான இசை, மற்றும் சாதனத்தின் வடிவமைப்பு,புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது இவை கள் தான் Apple சாதனங்களை மக்கள் விரும்பி வாங்குவதற்கு முக்கிய காரணம்.
இன்றும் கூட iPod சாதனத்தை முறியடிக்க இதுவரை வேறு ஒரு சாதனம் வரவில்லை. அதே நேரம் தனது வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள புதிய புதிய வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் தர வேண்டியது ஆப்பிள் நிறுவனத்தின் கடமையாகிறது.அந்த வகையில் இதுவரை தான் தயாரித்து வெளியிட்ட எந்த டிஜிட்டல் சாதனங்களிலும் F.M Radio வசதியை தராத ஆப்பிள் நிறுவனம் முதல் முறையா தனது iPod சாதனத்தின் Nano வரிசையில் F.M Radio மற்றும் வீடியோ கேமராவுடன் கூடிய புதிய சாதனத்தை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த iPod சாதனத்தில் உள்ள F.M Radioவில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்தே நிகழ்ச்சிகளை கேட்க முடியும்.அதாவதி இதை live pause என்று சொல்வார்கள்.இந்த தொழில்நுட்பத்தை F.M Radioவில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் இந்த F.M Radio வசதியை வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்போகும் தனது புதிய மாடல் iPhonஇலும் ஆப்பிள் நிறுவனம் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
விற்பனை விலை (8GB)£115, (16GB)£135
நன்றி:லங்காசிறி





